சடலங்களைத் தகனம் செய்ய இலங்கையிலும் காட்போட் அட்டை சவப்பெட்டி!
இலங்கையர்களும் உடலங்களைத் தகனம் செய்ய காட்போட் அட்டை சவப்பெட்டிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பின் தெஹிவளை – கல்கிஸ்ஸ நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் நீண்ட அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்கின்றனர்.
இவை நாட்டில் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சவப்பெட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சவப்பெட்டி மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் ஆனது. அத்துடன் பலகைகளால் தயாரிக்கப்படும் சவப்பெட்டிகளின் உற்பத்திச் செலவின் ஆறில் ஒரு பங்கு குறைவானதாகும் என்று இந்த சவப்பெட்டியை இலங்கையில் முதலில் அறிமுகம் செய்துள்ள அரச பணியாளரான பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.