
மணமக்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி!
திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் பயணக்கட்டுப்பாட்டின்போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவற்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்.
அது தொடர்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள காவற்துறையினரிடம் தெளிவுப்படுத்துமாறும் காவல்துறை பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.