யாழ்ப்பாணத்தில் குண்டுவெடிப்பு!
யாழ்ப்பாணம்-வடமராட்சி நெல்லியடிப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று நேற்றுமாலை 6.30 மணியளவில் பதிவாகியுள்ளது.
நபரொருவர் தவறவிட்ட பொதியொன்றை சோதனையிட்ட இராணுவ அதிகாரி இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளார் என தெரிய வருகின்றது.
குறித்த வீதியில் நடைப்பயிற்சியில் இராணுவத்தினர் இருவர் ஈடுபட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து நெல்லியடி போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.