இனங்காணப்படாத உயிரினமொன்றின் உடற்பாகங்கள் கரையொதுங்கின!
மொரட்டுவ, அங்குலான கடற்கரையில் நேற்று டொல்பினின் உடலை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் கரையொதுங்கியிருந்தன.
இந்த உயிரினம் ஒரு பாலூட்டியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அத்திடிய வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடலமைப்பில் டொல்பினைப் போன்று தோற்றமளிக்கும் குறித்த உயிரினத்தில் உடல், இரண்டு துண்டங்களாக கரையொதுங்கியிருந்தன.
அத்துடன் குறித்த உயிரினத்தின் உடல் பாகங்கனை மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், மேலதிக பரிசோதனைகளுக்காக அவை அத்திடிய வனஜீவராசிகள் மருத்துவ பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.