fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

“ஏழையாகப் பிறந்தது உன் தவறல்ல. ஆனால்….” -பில் கேட்ஸ்

Bill Gates என்ற பெயரை அறியாதவர்கள் உச்சரிக்காதவர்கள் அரிதினும் அரிதாகும். மொத்த பூவுலகினையும் தொழில்நுட்பத்தினூடான வசதிகளை ஏற்படுத்தி மாற்றமடையச் செய்வதனை தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற ஒரு தொழிலதிபர்.

இவர் புகழ்பூத்த செல்வந்தராக மட்டுமன்றி மென்பொருள் மேம்பாட்டாளர் முதலீட்டாளர் மனிதநேய கொடையாளர் மற்றும் Microsoft இன் ஸ்தாபகருள் ஒருவர் என பல்வேறான பரிணாமங்களில் உலகம் இவரை அறிமுகம் செய்கிறது.


“ஒருபோதும் உன்னை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்காதே அப்படிச் செய்வது உன்னை நீயே அவமதிப்பது போன்றதாகும்”

“ஏழையாகப் பிறந்தது உம் தவறல்ல ஆனால் ஏழ்மையானவனாகவே நீ இறப்பாயானால் அந்த பெருந் தவறின் முற்றுமுழு பொறுப்பாளியும் நீயே”


“பாரிய வெற்றியினை ஈட்டுவதற்கு நீ அதிகடினமான இடர்களையும் எதிர்கொள்ள நேரிடும்.”


என அவர் உரைக்கும் ஒவ்வொரு சொற்களும் செவிமடுப்போரின் சிந்தனைகளைத் துளைத்து அவர்களது வலிமையுணர்வை வலுப்பெறச் செய்கின்றது. முன்னேற்றத்துக்கான ஆவல் சாதனைக்கான வேட்கை மனக்கதவுகளின் அனுமதியின்றியே உட்புகுந்து விடுகின்றது.

வெற்றியின் உச்சத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகத்தரம்வாய்ந்த வியாபார நிறுவனங்களில் அனேகமானவை Bill Gates தனது வாழ்வியல் அனுபவங்களுக்கூடாக பகிர்ந்து கொண்ட வெற்றிகரமான வாழ்வுக்கான தலைமைத்துவத்துவத்திற்கான வழிமுறைகளையே தமது நிறுவனங்களின் உந்து சக்தியாகக் கொண்டு இயங்குகின்றன.


வழிமுறைகளை வெறுமனே வாசகங்களாக மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் செயல் வடிவமாக்கிய இவர் தனது சாதனையின் இரகசியங்களை எளிய பின்பற்றல் முறைகளை முன்வைத்திருக்கிறார்.


உனது சுவடுகள் அழிவடைந்திடாதவாறு அவற்றை ஒளிரச்செய்


நாம் கடந்து வந்த சுவடுகள் நிலைநிற்கும் என்பதில் உறுதியில்லை. சிலசமயங்களில் நாமே நமக்கான அடையாளங்களை உருவாக்கிட நேரிடுகிறது. இவ்வாறே கனவினை நோக்கிய எமது பயணத்தில் ஆரம்பித்து ஓரிரு படிகளிலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.

நாம் முடங்கிய நிலையிலிருக்கும் போதும் நாம் அடையவேண்டுமென இலக்காக எதனைக் கொண்டிருக்கிறோமோ அதனை நோக்கி எம்மை உந்திச் செல்வதே கனவாகும்.


இவ்வாறே கணனியே எதிர்கால நிர்ணயம் என Bill Gates நம்பினார். அவ்வாறே தான் நாமும் நமது முயற்சிகள் செய்கைகளின் பெறுபேறுகள் சிறந்தனவாக அமைந்திட வேண்டுமென்ற ஒரே நோக்குடன் காரியங்களில் ஈடுபட வேண்டும்.

எமது செயற்பாடுகளை பல வருடங்களின் பின்பு பார்க்கும்போதும் அவை சமூக அங்கீகாரத்துடன் ஏற்புடையவை என்ற திருப்தியை தர வல்லதாக இருக்கவேண்டும்.


தாக்கத்தை ஏற்படுத்தல்


Bill Gates தனது செயற்பாடுகளினால் கிடைக்கப் பெறும் தாக்கங்கள் விளைவுகளை கொண்டு பல்வேறு தெரிவுகளை மேற்கொண்டார். அவர் ஒவ்வொரு விளைவுகளுக்கூடாகவும் உந்தித் தள்ளப்பட்டார்.

தன் இயலுமைகளைக் கொண்டு மாத்திரம் அவர் தமது வெற்றிகளை எய்தவில்லை.

அவர் தனது ஒவ்வொரு செயற்பாடுகளின் நிறைவின் பின்பதாகவும் அவற்றை அளவீடுகளுடன் அவற்றை மதிப்பிடுகின்றார். ஒவ்வொரு செயற்பாடுகளைச் செய்ய முன்பும் அச்செயலுக்கான மதிப்பீடொன்றை கொண்டிருக்க வேண்டும்.

குறித்த செயலின் முடிவின் போது அதனை ஒப்பிட்டு பார்த்து நாம் எதிர்பார்த்த பெறுபேறுகளை அடைந்து விட்டோமா என நிர்ணயித்துக் கொள்ளலாம்.


துரிதம் மற்றும் உடனடித் தேவை பற்றிய உணர்வு


உலகில் வியாபாரம் தொழில்நுட்பம் போன்றன அதி துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனையே நீங்கள் அபாயகர கட்டத்தினில் உணர்ந்நு கொள்ளும் வேளை – உங்கள் வாழ்வினை மீட்கொள்வதிலும் மிக மிகத் தாமதமாகி நிற்கின்றீர்கள் என்றே கருதலாம். என்கிறார் Bill Gates.

ஒருவேளை நாமும் அச்சத்துடன் தயக்கத்துடன் எமது வாழ்க்கை ஓட்டத்தினைத் தொடருவோமானால் நாம் இந்த வேகத்துடன் இணையாக நிலைநிற்க முடியாது போகலாம்.

தர்க்க ரீதியான சிந்தனை துரித ஆற்றல் மற்றும் நெகிழ்வுத்தன்மை என்பன எமது நிலைநிற்றலுக்கு எமக்குத் துணை புரியும்.


உங்களின் தனித்துவமான கொள்கைளுடன் கூட உங்கள் பெறுமதியினைக் காத்துக் கொள்ளுங்கள்


நீங்கள் யாரென்பதை இந்த உலகத்தவர் அறிய நேரும்போது நீங்கள் அவர்களுக்கொரு வெளிச்சம் தரும் ஊன்றுகோலாகின்றீர்கள். நீங்கள் நடந்துகொள்ளும் விதம் உஙகள் பழக்கவழக்கங்களால் உங்களை அறியாமலேயே நீங்கள் அவர்களுக்கான முன்மாதிரியாகின்றீர்கள்.

அவர்களால் உங்கள் கொள்கைகளால் கவரப்படுகின்றனர். இந்த உபாயத்தினைத்தான் Bill Gates தனது Microsoft நிறுவனத்தில் உபயோகித்தார். அவரது மாற்றத்தை நோக்கிய கொள்கையினில் ஈர்க்கப்பட்டோர் அனேகர் இவருடன் கைகோர்த்தனர்.

இவரது மாற்றம் தொழில்நுட்பத்தோடு நின்று விடாது வறுமை ஒழிப்பு போன்ற பல்வேறு துறைகளின் மாற்றத்திற்காகவும் முன்வந்துழைக்கும் ஓர் மனித நேயனுமாவார்.


சரியான நபர்களுடன் சேர்ந்து உங்கள் திறமை மேம்படட்டும்


நீங்கள் தனித்து இயங்குவதை விட உங்களைச் சூழ பொருத்தமான அல்லது சரியான நபர்களுடன் இணைந்து செயற்படுவது சிறப்பானது.

இதன்போது அங்கே புதிய எண்ணங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பன உருவாகிட சந்தர்ப்பம் கிடைப்பதுடன் சிறந்த தீர்மானங்கள் எடுக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

ஒருவரது பலவீனங்கள் இயலுமைகள் இவ்வாறான சரியான நபர்களுடன் இணைகின்ற போது குறித்த செயற்பாடு குறைவுகளேதுமின்றி நிறைவடைகின்றது.


வெற்றியை நோக்கிய பாதையில் எப்போதும் முதன்மையானவனாக இருக்கவேண்டியதில்லை


முதன்நிலையில் நின்றுகொண்டிருப்பவனே வெற்றியை அண்மித்தவன் என்று கூறிட முடியாது. வெற்றியடைவதற்காக நீங்கள் வரிசைப்படுத்தலில் முதலமவதாக நின்றுகொண்டிருந்தால் மட்டும் போதாது.

உண்மையிலேயே வெற்றிக்கான ஆயத்தம் என்பது குறித்த விடயம் தொடர்பாக மேலும் ஆராய்ந்து கற்றுக்கொண்டிருப்பதாகும்.

நாம் செய்யப்போகும் விடயம் சார்ந்த பலம் பலவீனம் வாய்ப்புக்கள் மற்றும் சவால்களைக் குறித்து ஆராய்ந்து அறித்திருக்க வேண்டும். நிலை என்பது ஓர் தரிப்பிடம் மட்டுமே. அது நிரந்தரமற்றது.


எனவே நாமும் மேற்குறிப்பிட்டவை அனைத்தையும் எமது நாளாந்த வாழ்வில் பின்பற்ற முடியாவிடினும் எம்மைக் கவர்ந்த எமக்குப் பொருத்தமானவற்றை செயல் வடிவமாக்குவதுடன் நானும் ஓர் சாதனையாளன் என்ற அடையாளத்தை நிலைநாட்டுவோம்.


கட்டுரையாளர் : Book of Secret

Back to top button