
சகல மதுபான சாலைகளுக்கும் இன்று பூட்டு!
நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் இன்றைய தினம் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் 56 மதுவரித் திணைக்கள அலுவலகங்களின் கீழ் 900 உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.