தண்ணீர் பானைக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
தம்புள்ளை கலேவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட திக்கல பகுதியில் நேற்று (28) பிற்பகல் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் நிரப்பப்பட்ட பானைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தை தனது வீட்டின் பின்னால் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கலேவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.