பூமியை நெருங்கும் 4 கால்பந்து மைதானங்கள் அளவிலான குறுங்கோள்!
4 கால்பந்து மைதானங்கள் அளவு கொண்ட ‘2008 G20’ என்று பெயிரிடப்பட்ட குறுங்கோள் ஒன்று, இன்று இரவு 11.21 மணியளவில் பூமி அருகே கடந்து செல்ல உள்ளது.
ஆனால் அது பூமி மீது மோதிவிடுமோ என கவலைப்பட அவசியமில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். 97 மீட்டர் அகலம், 230 மீட்டர் நீளம் கொண்ட அந்த குறுங்கோள், மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், பூமியில் இருந்து 45 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது.
இதே குறுங்கோள், 1935ஆம் ஆண்டு 19 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும், 1977ஆம் ஆண்டு 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும் கடந்து சென்றதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.