மீன் விற்பனைக்கான அனுமதிபெற்று கசிப்பு விநியோகித்தவர் கைது!
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஹோமாகம, கெமுனு மாவத்தை பகுதியில் வீடொன்றில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 610,000 மில்லி லீற்றர் கோடாவும், 32 கசிப்பு போத்தல்களும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் மீன் விற்பனை செய்வதற்காக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 51 வயதான சந்தேக நபரை இன்று(8) ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.