
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தாக்குதல் ! !
யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது . தற்பாதுகாப்புக்காக அவர் மீள தாக்கியநிலையில் நபர் ஒருவர் காயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்றிருந்தார் .
இதன்போது அங்கு சில நபர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர் . அவர்கள் அர்ச்சுனாவுடன் தர்க்கம் செய்ய முற்பட்டுள்ளார் . இதனை அர்ச்சுனா காணொளி பதிவு செய்த நிலையில், தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என நபரொருவர் அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அர்ச்சுனாவை குறித்த நபர் தாக்கியுள்ளார் . இதனால் தற்பாதுகாப்புக்காக உணவு தட்டு ஒன்றினை எடுத்து குறித்த நபரை அர்ச்சுனா தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது .
இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.