மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு!
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இதுவரையில் 13.98 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.