அமொிக்காவினால் 6 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!
இலங்கையில் கொவிட் பரவல் நிலைமையை கட்டுப்படுத்த அமெரிக்காவினால் பெருந்தொகையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, விசேட விமானத்தின் மூலம் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவி பொருட்கள், உபகரணங்கள் என்பன இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, இலங்கையின் சுகாதாரப் பிரிவுக்கு தேவையான 880,000 அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், 1,200 ஒக்ஸ்மீட்டர்கள் உள்ளிட்ட மேலும் பல உபகரணங்கள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏற்கனவே 200 வெண்டிலேட்டர்களும் அமெரிக்காவினால் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு USAID திட்டத்தின் கீழ் இவ்வாறு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.