AL பரீட்சைக்கு சென்ற மாணவி மீது ஆசிட் தாக்குதல்
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் குறித்த யுவதியின் காதலன் எனவும், நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்து அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்நிலையில், குறித்த யுவதியின் தந்தை, அந்த இளைஞன் மீது பதிலுக்கு ஆசிட் வீசி தாக்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, குறித்த யுவதி, 45 வயதுடைய தந்தை மற்றும் 21 வயதுடைய இளைஞரும் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.