
இலங்கையில் அனைத்து ஆபாச இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை?
இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல், இவ்வாறான இணையத்தளங்களுக்கான பெயர்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் சேவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதான சிறுமி, இணைய வழியாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே, கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.