
கிளிநொச்சியில் இன்றும் கோர விபத்து! – ஒருவர் பலி!!
இன்று (2020-07-05) கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனமொன்றில் மோதியதால் இவ்விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த மோகன் ஆகாஷ் என்பவர் மரணமாகியுள்ளார். இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்