கொவிட் தொற்றாளர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு தேவைப்படுகின்றது!
மேல் மாகாணத்தில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் லால் பனாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் கடினமான தொழில்களில் ஈடுபடாது உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.
சிலர் தங்களுக்கு தொற்று உறுதியானதை அறியாது வீடுகளில் அல்லது பணியிடங்களில் கடினமான தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதன் பின்னரே வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு பிராணவாயுவினை வழங்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
அவர்களில் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே கொவிட்-19 தொற்று தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் லால் பனாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.