
கணிதப் பிரிவில் யாழ்ப்பாண மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் என்கிற மாணவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்.
கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
சரசாலையை பிறப்பிடமாக கொண்ட சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டிகளிலும் சாதனை படைத்து வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
இதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.