fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

தினமும் ஒரு கப் பழங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான்.

தினமும் பழங்கள் சாப்பிட்டால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர்.

நல்ல பழங்களைத் தினமும்சாப்பிட்டால், நினைவாற்றல் அபாரமாக இருக்கும். சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.

பழங்கள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. பழங்கள்… நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை.

இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும்?

பொதுவாக பழங்களில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் உண்டு. பழங்களில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்துவயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது.

தினமும் ஒரு கப் பழங்கள் சாப்பிடுவதல வரும் நன்மைகள் :

தினமும் ஒரு கப் பழங்கள் சாப்பிடுவதல வரும் நன்மைகள் : எந்தவகையான பழங்கள் என்றாலும் சரி ஒரு கப் அளவு பழங்களை அதாவது 250 கிராம் அளவிற்கு தினமும் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதனால் எந்த வகையான நோய்களையும் வராமல் தவிர்க்கலாம்.நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். நச்சுக்கள் வெளியேறும். உடல்உறுப்புகள் சுத்தமாகும். கண் பார்வை தெளிவாகும்.

முதுமை தள்ளிப் போகும். இவிய நோய்களை தடுப்பது மட்டுமல்ல, நோய்களை குணப்படுத்தவும் செய்கிறது. எந்த உடல்நோயை குணப்படுத்த எந்த பழம் பயன்படுகிறது என பார்க்கலாம்.

ரத்த சோகைக்கு :

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

பித்த நோய்கள் :

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். ப தலை வலி, கண்பார்வைக்குறைவு, பித்தம் காரணமாக இளநரை, என அனைத்து நோய்களும் குணமாகிறது.

நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் கிருமிகளிய அழிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.

அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button