fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்

ஜின்பிங்

உலகின் மிகப்பெரிய சனத்தொகை கொண்டதும் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வல்லமை கொண்டதுமான சீனாவின் தலைவராவார்.கடந்த வருடங்களில் சீனாப் பாராளுமன்றம் தனது அரசியலமைப்பைத் திருத்தியது, அதில் இவருக்கான அதிகாரங்கள் விரிவு படுத்தப்பட்டதுடன் இவரின் ஆட்சிக்கான கால எல்லை வரம்பை நீக்கியது.

2012 இல் இவர் தலைவரானதும் தனியார் மயமாக்கல் கொள்கைளை பரந்துபட்டு அமுல்படுத்தியதுடன் அதில் வெற்றியும் கண்டார்.சீனாவின் முன்னேற்றத்திற்கான தேசிய மற்றும் தனிப்பட்ட கொள்கைகளை சீன கனவு என்ற சுலோகத்தின் மூலம் பரப்பினார்.

இவர் மற்றையவர்களைப் போல் அல்லாமல் மக்கள் மத்தியில் பிரபல்யமான ஒருவராக வலம்வருகிறார்.குறிப்பாக தேசிய ஊடகங்கள் இவரின் ஒரு வேலை நாள் முழுவதையும் ஒளிபரப்பக்கூடிய அனுமதியை வழங்கியுள்ளார்

விளாமிடிர் புடின்

2013 ற்கும் 2016 ற்குமிடையே நான்கு முறை உலகின் சக்திவாய்ந்த நபராக தெரிந்தெடுக்கப்பட்டவர்,ரஷ்யாவின் கொள்கைகள் பல நாடுகளில் தாக்கம் செலுத்தக்காரணமானவர்.

ட்ரம்பின் வெற்றியில் ரஷ்யாவின் அதியுச்ச தலைவர்களுக்கு சம்பந்தம் உள்ளதா என இன்றளவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு ஆராய்ந்து வருகின்றது.126 மில்லியன் அமெரிக்கர்கள் ரஷ்ய அமைப்புகளால் வாங்கப்பட்ட அரசியல் விளம்பரங்களைக் கண்டதாக பேஸ்புக் ஒப்புக்கொண்ட போதிலும், டிரம்ப் மற்றும் புடின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

1952 ஆம் ஆண்டில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த புடின், யெல்ட்சின் ஜனாதிபதி காலத்தில் ஒரு வருடம் பிரதமராக பணியாற்றினார் மற்றும் 2000 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார்.புட்டினின் சர்வதேச செல்வாக்கு பெரும்பாலும் ஐரோப்பா, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பியதிலிருந்து உருவாகிறது,

ரஷ்ய அரசுக்கு சொந்தமான காஸ்ப்ரோம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய சப்ளையர்களில் ஒன்றாகும்.

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் முதலாவது மிகப்பெரிய பணக்கார ஜனாதிபதி இவராவார்.நியுயோர்க் நகரத்தின் அரைவாசிக் கட்டடங்கள் இவருக்கு சொந்தமானவையாகும்.கோல்ப் மைதானங்களும் வைன் உற்பத்தி ஆலை ஒன்றும் இவருக்கு சொந்தமாகவுள்ளது.தன்னுடைய பெயரை உரிமமாக உலகின் பல கம்பனிகளுக்கு வ்ழங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸில் குறைந்த விலையில் வீட்டுவசதிகளை உருவாக்கிய தனது தந்தை பிரெட் நிறுவனத்திற்காக அவர் பணியாற்றியிருந்தார்.டிரம்ப் தனது இரண்டு மூத்த மகன்களான டொன் ஜூனியர் மற்றும் எரிக் ஆகியோரை தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது குடும்பத் தொழிலை நடத்தும் பொறுப்பை வழங்கியுள்ளார்

ஏஞ்சலா மேர்கல்


ஜேர்மனியில் தொடர்ச்சியாக நான்கு முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஜேர்மனியின் முதலாவது பெண் ஜனாதிபதியாவார்.ஜேர்மனியை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு மீண்டும் வளர்ச்சிக்கு இட்டுச்சென்று ஐரோப்பிய பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதாரத்தை வழிநடத்துகிறார்.

ட்ரம்பை முழுவதுமாக எதிர்ப்பதிலிருந்து 1மில்லியன் சிரிய அகதிகளை ஜேர்மனிக்குள் அனுமதித்தது வரை ஒரு திடகாத்திரமான தலைவராக காணப்படுகின்றார்.மேர்கலின் பதவிக்காலத்தின் பின்னர் யார் வருவார்கள் என்ற ஒரு ஏக்கம் ஜேர்மனியர்களிடம் உள்ளது.

ஜெஃப் பெசோஸ்

1994 ஆம் ஆண்டில் சியாட்டிலிலுள்ள தனது கேரேஜிலிருந்து இகொமர்ஸ் அமேசானை நிறுவினார். அவர் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக வழிநடத்தி நிறுவனத்தின் 11.1மூ பங்குகளை வைத்திருக்கிறார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 இடையில், தொற்றுநோய்க்கு மத்தியில், அமேசான் 175,000 கூடுதல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.திருமணமான 25 வருடங்களுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டில் அவர் தனது மனைவி மெக்கென்சியை விவாகரத்து செய்தார், மேலும் தனது அமேசான் பங்குகளில் கால் பகுதியை அவருக்கு ஜீவனாம்சமாக வழங்கியிருந்தார்.

வணிக பயன்பாட்டிற்காக ரொக்கெட்டுகளை உருவாக்கி வரும் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஒர்ஜின், தி வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றை பெசோஸ் வைத்திருக்கிறார்.

Back to top button