RULES யாருக்காக?
“Rules are not for the rulers”, இந்த வார்த்தைகளை கேட்ட போது இத்தனை நாட்கள் எனக்கிருந்த சந்தேகம்தான், சட்டங்களை நடைமுறைப்படுத்துவோர் அதனை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லையா? என்பதுதான். ஆனால் ஒரு நாள் வீதி ஓரமாய் பேருந்துக்காக காத்திருந்த போது, சட்டென்று என் எண்ணத்தில் “Rules are not for the rulers” என்று தோன்றியது. இப்படி ஏன் தோன்றியது, சட்டங்கள் மீறப்படும் வெளிப்படையான ஒரு சந்தர்ப்பமாக போக்குவரத்தினை நாம் கூறலாம். பொலிஸ் அதிகாரி இருப்பார், அதனால் helmet போட வேண்டும், தண்டப் பணம் அறவிடப்படும் அதனால் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், அதிகாரி தவறாக பேசிவிடுவார் அதனால் வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தக் கூடாது. இது போன்ற எண்ணங்கள் எமக்குள் விதைக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே ஏன் இந்த சட்டக் கட்டுப்பாடுகள்? அதிகாரிகளுக்காகவா? இந்த நிதர்சனம் இன்று எங்கள் மத்தியில் மறைந்துள்ளது. எப்போதுமே நாம் தண்டனைகளை தவிர்ப்பதற்காக மட்டுமே சட்டங்களை பின்பற்றுகின்றோம். மாறாக அது எங்களுடைய கடமை என்பதை இன்னமுமே நாம் உணராமல் தான் இருக்கின்றோம். சட்டங்களும் கட்டுப்பாடுகளும் எங்களுக்கானவை, எம்மை நெறிப்படுத்துபவை, எம் உரிமை.
யாரோ ஒருவர் எம்மை தண்டிப்பார் என்பதற்காக இல்லாமல், எமது கடமையை நாம் செய்ய வேண்டும். இதே நிலைதான் எமது தொழிலிலும், மேலதிகாரி எம்மை கேள்வி கேட்பார் என்பதற்காக எதையும் செய்யக்கூடாது. குறித்த இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் எமக்கான கடமை என்னவோ அதனை சரிவர செய்ய வேண்டும். ஆனால் எம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்துள்ளோம். எப்போதுமே அடுத்தவர் கேள்வி கேட்பாரோ என்ற எண்ணத்தில் தான் சட்டங்களை பின்பற்றுகின்றோம். எமது கடமையை உணர்ந்தவர்களாக நாம் செயற்படுவோமானால் சட்டங்கள் எமக்கு சுமையாக இல்லாமல் எம் பணிகளை சுலபமாக்குவதாக அமையும்.
எனவே,உண்மையிலேயே சட்ட விதிகளும் கட்டுப்பாடுகளும் யாருக்கானவை என்பதை உணர்ந்தவர்களாக செயற்படுவோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனிகுமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.