fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? ஒரு வாரத்திற்குள் அறிக்கை!

நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தினால் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பாக மேற்கொண்ட பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதற்கமைய கொழும்பு நகரில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவியுள்ளதாக தெரியவந்தது.

அத்துடன் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் டெல்டா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து எமது செய்தி பிரிவு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தரவை தொடர்பு கொண்டு வினவியது. இதற்கு பதிலளித்த அவர், வைரஸ் தொற்று பரவும் வேகத்தினை அவதானிக்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டார்.

எனவே, அதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக பரிசோதனை குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button