ஜெர்மனியில் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஆப்கன் முன்னாள் அமைச்சர்.. மிதிவண்டியில் வீடுவீடாக சென்று கடிதங்களை வழங்குகிறார்!
ஆப்கானிஸ்தானின் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் சயீத் சதாத், ஜெர்மனியில் மிதிவண்டியில் வீடுவீடாகச் சென்று கடிதங்களை வழங்கும் வேலையைச் செய்து வருகிறார்.
தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்துள்ள சயீத் சதாத் 2016 முதல் 2018 வரை ஆப்கானிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அவர் ஜெர்மனியின் லீப்சிக் நகரில் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சீருடை அணிந்துகொண்டு மிதிவண்டியில் சென்று அலுவலகங்களுக்கும் வீடுகளுக்கும் கடிதங்கள், பொருட்களை வழங்கி வருகிறார். தனது படிப்புக்கு ஏற்றாற்போல் நல்ல வேலை கிடைக்கும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஜெர்மானியர் அல்லாதோருக்கு அத்தகைய வாய்ப்புக் குறைவு எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.