பருத்தித்துறையில் 4.1 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
பருத்திதுறை கடற்பரப்பில் 4.1 கோடி ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரையொதுங்குவதற்காக சென்ற படகொன்றை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த படகிலிருந்து 139 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, பருத்தித்துறையை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுகளை உடைய இரண்டு சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.