சாம்சங் கேமராவுடன் உருவாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்!
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 பதிப்பை வெளியிட்டுள்ளது. பீட்டா பதிப்பின் இறுதிக்கட்ட கம்பேடபிலிட்டி சோதனையை துவங்கி, இதற்கான அப்டேட்களை உடனடியாக வெளியிட ஆப் மற்றும் கேம் டெவலப்பர்களுக்கு கூகுள் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 பதிப்பு பிக்சல் 3 மற்றும் அதன்பின் வெளியான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பதிப்பு ஆண்ட்ராய்டு டிவி-க்களுக்கு ADT-3 டெவலப்பர் கிட் உடன் வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் மற்றொரு பீட்டா வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய ஆண்ட்ராய்டின் பீட்டா சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் சாம்சங்கின் 50எம்பி GN1 கேமரா சென்சார் வழங்கப்பட இருப்பது புதிய ஆண்ட்ராய்டு 12 பீட்டா மூலம் தெரியவந்துள்ளது.
டென்சார் சிப்செட்
சமீபத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2100 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆண்ட்ராய்டு 12 பீட்டாவில் புதிய பிக்சல் 6 சீரிஸ் எக்சைனோஸ் 5123 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இது 7 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. இந்த பிராசஸர் 5ஜி-யின் சப்-6GHz மற்றும் எம்.எம்.வேவ் ஸ்பெக்ட்ரம்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.