தங்கம்போல உங்க முகம் ஜொலிக்கனுமா?
பூசணிக்காயை சாம்பாருக்கும் திருஷ்டி கழிக்கவும் மட்டுமே பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பூசணிக்காயில் இன்னும் ஏராளமான பல அற்புதங்கள் உண்டு.
பூசணிக்காயில் நீர்ச்சத்துக்கள் மிக அதிகம். அதோடு கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டோ கரோட்டின் நிரம்ப உள்ளது.
பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இளைத்த உடல் உள்ளவர்கள் சற்று பூசியது போல் ஆகிவிடுவார்கள் என்று சொல்வதுண்டு.
அதேசமயம், எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்ற ஒரு அற்புத அழகுசாதனப் பொருளாகவும் பூசணிக்காய் செயல்படுகிறது.
பூசணிக்காய் கொண்டு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் தடவி வந்தால், முகம் பொன்னிறமாக மின்ன ஆரம்பித்துவிடும்.
பூசணிக்காய் மாஸ்க் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் சதைப்பகுதி – அரை கப்
தேன் – 1 ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்
பட்டைப்பொடி – 2 ஸ்பூன்
செய்முறை
பூசணிக்காயின் தசைப்பகுதியை நன்கு மசித்துக்கொண்டு, அதனுடன் தேன், பால், பட்டைப்பொடி ஆகியவற்றைப் பொடி செய்து ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகம் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
இந்த மாஸ்க்கை 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து உலரவிட வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.
இதை வாரத்துக்கு இருமுறை செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும். முகச் சுருக்கங்கள் மறையும்.
சருமம் பொன்னிறமாக மின்னும்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.