கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்கள் குழுந்தைகள் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்துள்ளது.
ஆகையால் விரைவாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசிபோடும் திட்டங்களை விரைவாக கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.