அட்டகாச புதிய அம்சத்துடன் கலக்கவுள்ளது ஓலா ஸ்கூட்டர்!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரின் ஒரு புதிய அம்சத்தைப் பற்றி சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஓலா மின்சார ஸ்கூட்டரை, வாகன ஓட்டிகள், நம்பமுடியாத வேகத்தில் ரிவர்சில், அதாவது பின்பக்கமாக ஓட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் பைக் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில், 2021 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய அம்சத்தைப் பற்றி அறிவித்த ஓலா எலக்ட்ரிக், ஒரு ட்வீட்டில், “நீங்கள் ஓலா ஸ்கூட்டரை நம்பமுடியாத வேகத்தில் ரிவர்சில் ஓட்டலாம். நீங்கள் இப்போது ஓலா ஸ்கூட்டரை ரூ.499 என்ற நம்பமுடியாத விலையில் முன்பதிவும் செய்யலாம்!” என தெரிவித்திருந்தது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.