இங்கிலாந்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட குளிரூட்டும் கோபுரங்கள்!
இங்கிலாந்தில் பயன்பாடின்றி இருந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் நொடிப்பொழுதில் வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டன.
8 பிரமாண்ட குளிரூட்டும் கோபுரங்களைக் கொண்ட எக்பரோ (Eggborough) மின் நிலையம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யார்க் ஷைர்-ன் (Yorkshire) அடையாளமாக விளங்கியது.
பல ஆண்டுகளாக மின் நிலையம் பயன்பாடின்றி இருந்ததால் அதன் ஒரு பகுதியை மறு கட்டமைப்பு செய்வதற்காக 4 குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
300 அடி உயர கோபுரங்கள் ஒரே சமயத்தில் தகர்க்கப்பட்டதால் வானுயரப் புழுதி எழும்பியது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.