டியூஷன் வகுப்புகள் மீள ஆரம்பம்!
கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக தடை செய்யப்பட்ட தனியார் வகுப்புகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என அரசாங்க தகவல் நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆனி 15ம் திகதியிலிருந்து டியூஷன் வகுப்புகள் செயற்படமுடியும்.
அதிகபட்சமாக ஒருவகுப்பில் 100 மாணவர்களே அனுமதிக்க முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இடவசதி குறைந்த வகுப்பறைகளில் சமூக இடைவெளி விதிமுறைக்கமைவாக செயற்படுமாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.