கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் நாளாந்தம், கொவிட்-19 தொற்றுக்குள்ளாகின்ற சிறார்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, சிறுவர் நோய் தொடர்பிலான விஷேட நிபுணர், வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாளாந்தம், 5 முதல் 10 க்கு இடைப்பட்ட சிறார்கள், கொவிட்-19 தொற்றுக்குள்ளாவதை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கொவிட்-19 தொற்றால் 500க்கும் அதிகமான சிறார்கள் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 சிறுவர்களும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பிலான விஷேட நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.