fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

முதலிரவு ஆய்வுகளும்.. ருசிகரமான உண்மைகளும்..

திருமணம் முடிந்து முதலிரவுக்குள் அடியெடுத்துவைக்கும் தம்பதிகளை பற்றிய ருசிகரமான ஆய்வுகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா ஆய்வு களுமே, ‘அது எந்த தம்பதிக்கும் முழுமையான சுகத்தை தரும் இரவாக அமைந்ததில்லை’ என்றே குறிப்பிடுகின்றன. அடுத் தடுத்த நாட்களே அவர்களது ஆசைகளை தீர்த்துவைக்கின்றன என்று குறிப்பிடுகின்றன. சில புதுமணத் தம்பதிகளின் முதலிரவு அனுபவங்களை கேட்போம்!

அனீஷ் தனக்கு பணம், நகை எதுவும் தேவையில்லை. பெண் அழகாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விதித்தான். அவன் எதிர்பார்த்தது போன்ற பெண்ணை பெற்றோர் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்தார்கள். அந்த பெண் மிகவும் நல்லவள். ஆனால் முதலிரவில், கணவருடன் தனிமையில் நெருங்க தயங்கினாள். அதனால் அவன், மனைவி தன்னிடம் பிரியமாக இல்லை. அவளை தன்னிடம் ஒப்படைக்க தயங்குகிறாள் என்று நினைத்துவிட்டான். அதனால் அவர்களது முதலிரவு தள்ளிப்போனது. புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து, ஒவ்வொரு நாளையும் தள்ளிக்கொண்டே இருந்தாள். அவளை ஏதோ ஒரு விஷயம் ஆட்டிப்படைப்பது, அவனுக்கு புரிந்தது.

பலமுறை அதுபற்றி அவன் பேச முயற்சித்தும், அவளிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணுக்குரிய பொலிவு அவள் முகத்தில் மலராமல் போனது பெற்றோரை கவலைக்குள்ளாக்கியது. அவளது பயத்துக்கும், தயக்கத்துக்கும் உண்மையான காரணம் எது என்பதை வெகுகாலம் கழித்தே அவர்களால் கண்டறிய முடிந்தது.

திருமணமான அவளுடைய தோழிகளில் சிலர், தங்களுக்கு அன்று வலி அனுபவம் ஏற்பட்டதாக அவளிடம் பகிர்ந்திருக்கிறார்கள். அதை கற்பனை செய்துபார்த்து, தனக்கும் அதுபோன்ற வலி ஏற்பட்டுவிடும் என்று அவள் பயந்துவிட்டதாலே, கணவரின் நெருக்கத்தை தவிர்த்திருக்கிறாள். முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த பயத்தை போக்குவதற்குள் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது.

வித்யாவின் கதை இன்னொரு மாதிரியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில் அவள் கதிகலங்கிப் போய் இருந்தாள். மணப்பெண்ணுக்குரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. பெற்றோர் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய நெருங்கிய தோழி அவளை தனியே அழைத்து விசாரித்தாள். வித்யாவோ அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து போக கவலையாக இருக்கிறது என்றாள். தோழி அதை நம்பவில்லை. அவள் எதையோ மறைக்க முயற்சிப்பது புரிந்தது. எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். நான் தீர்வு சொல்கிறேன் என்று ஆறுதலாக பேசினாள்.

அப்போது தயக்கத்தில் இருந்து விடுபட்ட வித்யா, ‘முதலிரவை நினைத்து பயப் படுகிறேன்’ என்றாள். அப்படி என்ன பயம் என்று தோழி கேட்டபோது கண்ணீர் விட்டு அழுதபடி, அறியாத வயதில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டாள். ‘என்னவென்றே தெரியாத வயதில் நிகழ்ந்து விட்ட தவறுக்கு தான் காரணம் இல்லை என்றாலும் அது அடிக்கடி மனதுக்குள் வந்து காயப் படுத்துகிறது. அதனால் முதலிரவை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்படி திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவது?’ என்று கேள்வி எழுப்பியவள், ‘எனக்கு உறுத்தலாகவும், பயமாகவும் இருக்கிறது. என்னை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டால் என் கணவர், என் குடும்பத்தை பற்றியும் கேவலமாக நினைத்து விடுவார்’ என்று கதறியழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொன்ன தோழி, ‘நீ அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கிறது. எனக்குகூட நடந்திருக்கிறது. நான் அதை கெட்டகனவாக நினைத்து மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. அதை திரு மணத்திற்கு பின்பு உன் கணவரிடம் சொன்னால் தேவையற்ற பிரச்சினைதான் ஏற்படும்’ என்று சரியான முறையில் விளக்கம் கொடுத்தாள்.

வித்யாவிற்கு நடந்தது என்னவென்றால், தனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலத்தில் அவள் தனது தோழனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டாள். அதன் பின்பு தன்னை திருத்தி, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், தான் உறவு கொண்டது வருங்கால கணவருக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை வாட்டிவதைத்ததற்கான காரணம்!

இதுபோல பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.

மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும். அதில் அலட்சியம்காட்டக் கூடாது. தேவைப்பட்டால் அதற்குரிய கவுன்சலிங்கை பெறவேண்டும். அவளது மனதில் இருக்கும் குழப்பங்களை அகற்றிவிட்டு, அதன் பின்பு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தால்தான், முதல் இரவு மட்டுமின்றி எல்லா இரவுகளும் இனிக்கும்.

திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப் பக்குவத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி விடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக்கூடாது.

ஆய்வுகள் சொல்வதுபோல் முதலிரவு இனிக்காவிட்டாலும், அடுத்தடுத்து வரும் அனைத்து இரவுகளையும் இன்பமயமானதாக ஆக்க கணவனும்- மனைவியும் மனம்விட்டுப்பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கையும் கொள்ளவேண்டும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button