வீடுகளில் இடம்பெறும் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வு!
கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், வீடுகளில் இடம்பெறும் திடீர் விபத்துக்களானது, முன்னைய காலத்துடன் ஒப்பிடுகையில், 50 இலிருந்து 75 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், வீதி விபத்துக்கள் 9 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு விபத்துக்களினால், வருடாந்தம் 12 இலட்சம் பேர் வரை அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
2025ஆம் ஆண்டாகும்போது இந்தத்தொகை 15 இலட்சத்தினை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்கள், கீழே வீழ்தல், சிராய்ப்பு, உடலில் விஷம் கலத்தல், விலங்குக்கடி, மின்சார தாக்கம்;, தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற பல விபத்துக்கள் காரணமாக வருடந்தோறும் 12,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.