தடுப்பூசி செலுத்தும் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது!! இராணுவத் தளபதி கூறும் விளக்கம்!
அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன.
இதன் காரணமாகவே பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.