சத்தமின்றி டேப்லெட் உருவாக்கும் ஒன்பிளஸ்!
ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) பெயரில் புது சாதனம் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
தற்போது புது ஒன்பிளஸ் பேட் ‘examination’ பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் டிவி, அணியக்கூடிய சாதனங்களை தொடர்ந்து ஒன்பிளஸ் தற்போது டேப்லெட் பிரிவில் களமிறங்க இருக்கிறது. வரும் நாட்களில் புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்படுவதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. அதன்படி ஆக்சிஜன் ஒஎஸ் கஸ்டம் ரோம் ஒப்போவின் கலர் ஒஎஸ் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இணைப்புக்கு பின் ஆக்சிஜன் ஒஎஸ்-இல் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.