கொவிட் நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?
இந்த கொரனா லாக்டவுனில் துணையுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. குறிப்பாக, செக்ஸ் காரணமாக கோவிட் பரவுமா போன்ற சந்தேகங்கள் இடம் பெறுகின்றன. ஏதாவது ஒரு வகையில் அத்தியாவசிய பணிக்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் பலரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் செக்ஸ் வைத்துக் கொள்வது எந்த வகையில் சாத்தியம் என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதில் இருக்கிறது தொடர்ந்து படியுங்கள்.
பயணங்களின் போது தவிருங்கள்:
லாக்டவுன் காரணமாக பலரும் வேலை பார்க்கும் இடங்கள், சுற்றுலா சென்ற இடங்கள் என்று பல்வேறு இடங்களில் சிக்கி இருப்பார்கள். இந்த நிலையில், ஒரு பயணம் செய்து வீடு சேர்ந்த பின் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியமான ஒன்றாகும். அந்த காலக் கட்டங்களில் துணையுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஹோட்டல்களை பயன்படுத்தாதீர்கள்:
இந்த கோவிட் காலத்தில் சுற்றுலா செல்வது மற்றும் பயணங்கள் மேற்கொள்வது வெகுவாக குறைந்து இருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒன்று ஆகும். துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே சென்றாலும் அங்கு செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். முக்கியமாக ஹோட்டல்கள் ரிசார்ட்கள் போன்றவற்றில் தங்கி செக்ஸ் வைத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
துணைக்கு தொற்று இல்லை
இந்த காலத்தில் காதலர்கள், திருமணமானவர்கள் என பலரும் வெவ்வேறு பகுதிகளில் தங்கி பணி புரிவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. எனவே இந்த கோவிட் காலத்தில் அடிக்கடி பயணம் செய்பவராக அல்லது வேலை நிமித்தமாக பலரையும் சந்திக்க கூடிய நபராக இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். அல்லது அவர் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் செக்ஸ் வைக்கலாம். சாதாரண நாட்களை போல இருவரும் ஒன்றாக இருக்கும் நாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கத்தினை கோவிட் காலங்களில் பயன்படுத்துவது நல்லது அல்ல,
பழக்கம் இல்லாதவரை தவிருங்கள்:
முன்பின் அறிமுகம் இல்லாதவரோடு செக்ஸ் வைப்பதால் பாலியல் நோய்கள் ஏற்படுகின்றன. அதுவும் கோவிட் காலங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது அல்ல. அவரின் கோவிட் தனிமைப்படுத்துதல், நோய் தாக்கப்பட்டவரா போன்ற எந்த தகவலும் தெரியாமல் இருக்கும் போது அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறாகும்.
செக்ஸின்போது வைரஸ் பரவுமா?
இயல்பாகவே, கை மற்றும் வாயின் வழியாக கொரனா பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செக்சின் போது வைரஸ் பரவுமா என்று கேள்விகள் எழுகின்றன. பல்வேறு ஆய்வுகளின்படி, உடலை தொடுவது மூலம், நெருக்கமாக மூச்சு விடுவதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.
ஒருவேளை துணையின் கோவிட் சார்ந்து ஐயம் இருப்பின் மாஸ்க் அணிந்தவாறு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உடலுறவின் போது காண்டம் அணிந்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வேறு என்ன செய்ய வேண்டும்?
இதன் மூலம் கோவிட் பரவலுக்கும் செக்ஸூக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உடல் தொடுவதாலே கூட கோவிட் பரவும் என்பதால் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.
மேலும், உடலுறவிற்குப் பிறகு 20 வினாடிகளுக்கு தொடர்ந்து கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
மேலும், கோவிட் காலங்களில் சுய இன்பம் செய்து கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.