வீதியில் சென்றவரை மோதித்தள்ளிய லொறி!
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை லொறி ஒன்று மோதித்தள்ளியதில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார்.
வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி ஒன்று, பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதியுள்ளது. மண்லொறி தப்பிச் சென்று விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நின்றதுடன் அதன் சாரதி தப்பி சென்றிருந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் பெறப்பட்டுள்ளதுடன், தப்பி சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.