இலங்கையில் வீடுகளின் விலைகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!!
கொவிட் தொற்று அச்சுறுத்தலக்கு மத்தியிலும் இலங்கை பிரபல சொகுசு மாடி வீடுகளின் விற்பனைகள் அதிகளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் இறுதி காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் விற்பனைக்காக தயாரான வீடுகளில் 92 வீதமானவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சொத்துக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் வரை விலையில் உள்ள வீடுகளை கொள்வனவு செய்வதற்கு அதிக கோரிக்கைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வீடுகளின் கொள்வனவாளர்களில் பெரும்பான்மையானோர் இலங்கையர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் கொள்வனவு செய்யப்பட்ட வீடுகளில் உடனடியாக குடியேறியுள்ளனர். மேலும் இந்த வீடுகளில் பெரும்பான்மையானவற்றை கொள்வனவு செய்வதற்கு வங்கி கடன் உதவியுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.