இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனிலும் இதுவரை இந்த பிராசஸர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹானர் 50 சீரிஸ் மாடல்களில் இந்த பிராசஸர் முதல்முறையாக வழங்கப்பட்டது.
பின் ரியல்மி, ஐகூ, மோட்டோரோலா, ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக அந்தந்த நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.
முந்தைய தகவல்களின்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி எம்51 மாடலை போன்றே புதிய எம்52 5ஜி மாடலிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.