காதலை முறித்து கொண்டதால் , காதலனின் பைக்கை தீ வைத்து கொளுத்திய காதலி..
காதலன் காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில் தான் பரிசாக வழங்கிய மோட்டார் சைக்கிளை காதலி தீ வைத்து கொளுத்திய சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது.
பாங்காக்கைச் சேர்ந்த 36 வயது பெண் தான் நேசித்த காதலன் காதலை திடீரென முறித்து கொண்டதால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காதலன் பணிபுரியும் இடத்திற்கு சென்ற அவர் தான் அன்புப் பரிசாக அளித்த 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்.
அவரது இந்த செயல் வாகன நிறுத்தம் இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.