மரவள்ளிக் கிழங்கு மூலம் லன்ச்ஷீட் உற்பத்தி!
மரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தி, விரைவாக உக்கக் கூடிய லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன் உறைகளை உற்பத்தி செய்வதற்கு தொழில்முயற்சியாளர்கள் இருவர் முன்வந்துள்ளனர்.
சூழலுக்கு இணக்கமான லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன் உறைகள் நேற்று (23) சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.
எந்தவித இரசாயன பொருட்களையும் பயன்படுத்தாமல் இந்த லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன் உறைகளை உற்பத்தி செய்ய முடியும் என சுற்றாடல் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் சிறப்பங்காடிகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன் உறைகள் வீசப்படுவதுடன், நாளாந்தம் 10 மில்லியனுக்கும் அதிகமான லன்ச்ஷீட்கள் வீசப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் காரணத்தினால் சூழலுக்கு இணக்கமான தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.