தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை எனக் கூறிய வட கொரியா -சந்தேகத்தில் WHO
தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம், வட கொரியா அளித்துள்ள அறிக்கையில், ஜூன் 10ம் தேதி வரை அறிகுறிகளுடன் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்ததாகவும், அதில் யாருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் மோசமான சுகாதாரக் கட்டமைப்பு, சீனாவுடன் எல்லைப் பகிர்வு, எந்த ஒரு பொருளாதாரத் தேவைக்கும் சீனாவைச் சார்ந்திருக்கும் வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐயம் எழுப்பியுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.