யாழில் பரவியுள்ள டெல்டா வகை கொரோனா!
யாழ். மாவட்டத்திலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதை ஆராய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் சில, மேலதிக பரிசோதனைகளுக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொட பகுதியில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பலரின் பி.சி.ஆர் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 2 வீடுகளை சேர்ந்த 5 பேருக்கு இந்தியாவில் பரவிய டெல்டா வகை திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வடக்கு சுகாதார பிரிவினர் அதிக வைரஸ் பரவலுள்ள இடங்களில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பரிசோதனை முடிவுகள் அடுத்த வாரமளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.