fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

காதலில் இலகுவாக வெற்றிபெறும் ராசிகள் இவை தான்!

காதல் இல்லாத வாழ்க்கையா என்று பலரும் கேட்கின்றனர். ராசிகள், ராசிகளை ஆதிக்கம் செய்யும் கிரகங்கள், கோள்களின் தசாபுத்திகளைப் பொறுத்து காதல் அம்பு தாக்குகிறது. மன்மதன் அம்பு உரசிவிட்டால் காதல் வலையில் விழுவதைத்தவிர வேறு வழியில்லை. எந்த ராசிக்கார்கள் காதலில் கில்லாடி என பார்க்கலாம்.

சிலருக்கு 18 வயதில் காதல் வரலாம், சிலருக்கு 25 வயதில் காதல் அம்பு தாக்கலாம். சிலரோ பள்ளிப்பருவத்திலேயே காதல் வயப்படுகிறார்கள். இதற்குக் காரணம் காதல் கிரகங்களின் செயல்பாடுகள்தான்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி ஏற்படும்.

களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே திருமணம் செய்து கொள்வார். ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

காதல் ராசியில்லை

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்டவர்கள். மேன்மையான அந்தஸ்து கொண்டவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட ஆயுள் கொண்டவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் காதலில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஜோதிடம் கூறுகிறது. இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையானது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இவர்கள் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

ரிஷபம் துலாம்

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் காதல் நாயகன் சுக்கிரனை ஆட்சி வீடாக கொண்டவர்கள். ரிஷப ராசியில் பிறந்தவர்கள், கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். செல்வம், செல்வாக்குடன் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.

இவர்களின் காதல் உண்மையும், தூய்மையும் கொண்டதாக இருக்கும். துலாம் ராசியினருக்கு காதல் அதே நேரத்தில் இவர்கள் காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம் கன்னி

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதனை ஆதிக்க நாயகனாகக் கொண்டவர்கள். இவர்கள் கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள்.

எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வம், செல்வாக்குடன் நீண்ட ஆயுளோடு வசிப்பார்கள். மிதுனம் ராசியினருக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். கன்னிராசிக்காரர்களுக்கு காதல் உணர்வோடு கடமை உணர்வும், அன்பும் அதிகம் இருக்கும்.

கடகம்

கற்பனை வளம் கொண்ட கடகராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். அடிக்கடி உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருப்பார்கள். அதிகமாக கோபத்தால் நரம்புகள் பாதிக்கப்படும். சந்திரனை ஆதிக்கநாயகனாகக் கொண்ட இவர்களுக்கு தைரியமும், தேய்ந்து மறையும்.

சிம்மம்

சிங்க ராசிக்காரர்களே… சூரியனை ஆதிக்க நாயகனாகக் கொண்டவர்களான இவர்கள் சூரியனைப் போல ஒளிர்வார்கள். கல்வியில் திறமையோடு தேர்ச்சியடைவார்கள். மேன்மையான பதவியில் இருப்பார்கள். கிரக பலம் கொண்ட ஜாதகர்களாக இருந்தால் நோய் நொடியின்றி தீர்க்க ஆயுளோடு இருப்பார்கள். திறமைசாலியாக இருப்பதால் கர்வத்தோடு இருப்பார்கள். சிம்மராசிக்காரர்களுக்கு காதல் மகத்துவம் வாய்ந்தது. காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது.

தனுசு மீனம்

குருவை ஆதிக்க நாயகனாகக் கொண்ட தனுசு, மீனம் ராசிக்காரர்களே…சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு ஆகிய நல்லொழுக்கங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். கல்வியில் சிறந்தவர்கள். உயர்பதவி உங்களைத் தேடி வரும். 80 வயதிற்கு மேல் நீண்ட ஆயுளோடு இருப்பீர்கள். காதலில் திறமைசாலியாக இருப்பார். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் வெற்றி அடையும்.

மகரம் கும்பம்

சனிபகவானை ஆதிக்கமாகக் கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்களே.. காரியங்களில் விடாப்பிடியாக இருந்து செயல்களில் வெற்றி பெறுவதில் வல்லவர்கள். செல்வம், செல்வாக்குடன் கீர்த்தி பெற்று வாழ்வார்கள். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். துணையிடம் அதிக பற்றுதலோடு இருப்பார்கள். நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்கள் உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்கள் உண்மையாக காதலிப்பார்கள்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button