பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? புதிய அறிவிப்பு வெளியாகியது!
சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.
மேலும் சுகாதார நடைமுறைகளின் பிரகாரமே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் நிர்வாகத்தினருக்கு கட்டாயம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் இவ்வாறான நிலையில், பாடசாலையை மீள ஆரம்பிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கின்றார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.