fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

திருமணத்தில் இணையக்கூடாத இராசிகள் இவை தான்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்திற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும், திருமண பொருத்தத்தின் போது கண்டிப்பாக அவசரப்படக் கூடாது. திருமண பொருத்தம் விஷயத்தில் பல்வேறு நட்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம் என பல அம்சங்களை பார்த்து திருமண பந்தத்தில் ஒரு ஆணையும், பெண்ணையும் சேர்ப்பது வழக்கம்.
சில ராசிகள் பொதுவாக பொருந்தக்கூடிய நட்பு கிரகங்களைக் கொண்டதாக இருந்தாலும் , அதில் சில எதிரும் புதிருமாக இருக்கும். அந்த வகையில் இங்கே திருமணத்திற்கான சில ராசி பொருத்தம் எப்படி இருக்கும். அப்படி சில பொருத்தம் இல்லாத விஷயங்களைக் கொண்ட ராசிகள் இணையும் போது அவர்கள் இடையே மனஸ்தாபம் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.

​கடகம் மற்றும் சிம்மம்
கடக ராசி அதிபதி சந்திரன், சிம்ம ராசி அதிபதி சூரியன். இரண்டும் நட்பு கிரகங்கள் தான். இருப்பினும் இவர்களின் சில குணாதிசயங்களால், இவர்கள் திருமணம் செய்தால் அவர்களுக்கு இடையே ஒரு விசித்திரமான சண்டை ஏற்படக்கூடும்.

காரணம், கடக ராசி தன் துணை மீது ஆழ்ந்த பாசம் வைத்திருக்க விரும்புவார். ஆனால் சிம்ம ராசியோ துணையுடன் பாதுகாப்பற்ற உணர்வு காரணமாக, அவர்களிடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட காரணமாக அமையும்.

​கும்பம் மற்றும் மகரம்

ஜோதிடத்தின் படி, கும்பம் மற்றும் மகரம் இரு ராசிகளின் அதிபதி சனி பகவான். சர ராசியை சேர்ந்த மகரம், ஸ்திர ராசியை சேர்ந்த கும்பத்துடன் சேரும் போது இருவரும் வித்தியாசமான நடத்தையின் காரணமாக தினம் தினம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கக் கூடிய சூழல் இருக்கும்.

மகர ராசிக்காரர்கள் இதில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கும் அதே நேரத்தில் கும்ப ராசியினர் உறவை வளர்ப்பதில் மிக விட்டுக் கொடுத்து செல்பவராக இருப்பார்கள். இருப்பினும் இவர்களின் இருவரின் சித்தாந்தங்களும் அதிக வேறுபாடு இருப்பதால் கும்பம் மகரத்தின் உறவில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

​மிதுனம் மற்றும் கன்னி

ஜோதிடத்தின் படி, மிதுன ராசி, கன்னி ராசிகளின் அதிபதி புதன் பகவான். இரண்டும் உபய ராசிகளின் கீழ் வருகிறது. பொதுவாக சிறப்பாக பொருந்தக்கூடிய ராசிகள் ஆகும். இருப்பினும் அவர்களின் சுய ஜாதகப்படி இவர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதாகும்.

உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்கான வாழ்க்கைத் துணை, குடும்ப நிலை எப்படி இருக்கும்?
மிதுனம் ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாகக் கன்னி ராசி துணை இருப்பதால் அந்த உறவிலிருந்து வெளியேற விரும்புவர். இருவரும் உணர்ச்சிவசப்படுவதை விடுத்து, கோபத்தைக் குறைத்துக் கொண்டால் இந்த இரண்டு ராசியின் பொருத்தம் மிக சிறப்பாக இருக்கும்.

​ரிஷபம் மற்றும் துலாம்

ஜோதிடத்தின் படி, ரிஷபம் மற்றும் துலாம் ராசி அதிபதி சுக்கிர பகவான். ஒருவரின் திருமண வாழ்க்கையில் இன்பங்களை அளிக்கக்கூடியவர் சுக்கிர பகவான். அதனால் இரு ராசிகள் இணையும்பட்சத்தில் இவர்கள் மத்தியில் மிக அதிக காதல் நிறைந்திருக்கும். இந்த இருவரும் ஒருவருக்கொருவர் அதிக நேரம் விலகி இருக்க முடியாது.

ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு, அவர்கள் இருவரும் தங்கள் கருத்துக்களில் ஒருவருக்கொருவர் உடன்பாடில்லை என்ற எண்ணம் வரும் போது அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது. அதனால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து சென்றால் மிக சிறந்த தம்பதியாகத் திகழலாம்.

​கடகம் மற்றும் தனுசு

சந்திரனை அதிபதியாக கொண்ட கடகம், குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் சேரும் போது நல்ல பொருத்தம் ஏற்படும். இவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னையே ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லாததாகும்.

இதற்கு முக்கிய காரணம், தனுசு மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாகவும், மறுபுறம், கடக ராசியினர் சூழ்நிலை மாற்றங்களை பொருட்படுத்தாமல் தான் எப்படியோ அப்படியே வாழ ஆசைப்படுவர். அதனால் இந்த ராசியினர் திருமணம் செய்து கொள்ளும்போது, மனஸ்தாபம் அடிக்கடி ஏற்படக்கூடும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button