சீனாவில் புதிய வகையான கொரோனா வைரஸ்கள் வௌவால்களிடம் கண்டுபிடிப்பு!
சீனாவில் புதிய வகையிலான கொரோனா வைரஸ்களை வௌவால்களிடம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கனவே உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை பலிகொண்டுள்ள கொரோனா பெரும் தொற்றுடன் உலக நாடுகள் போராடி வருகின்றன. சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா ,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புதிய வகை சார்ஸ் கோவி 2 எனும் வைரசை கண்டுபிடித்துள்ளனர். வௌவால்களில் எத்தனை வகை கொரோனா வைரஸ்கள் உள்ளன என்றும் அதில் எத்தனை மனிதர்களிடம் பரவி நோய்மையை ஏற்படுத்தக் கூடியவை என்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.