கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை சீனா தெரிவிக்க வேண்டும்!
கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கின் வலியுறுத்தி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா பரவலுக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினார். இப்போது பரவும் கொரானா எப்படி வந்தது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே வருங்காலங்களில் இது போன்ற பெருந்தொற்றுக்களில் இருந்து தப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி, சீனா தனது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தனைமையையும் நிரூபிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.