WhatsApp முழுசா மாற போகுது; மார்க் கொடுத்த ஓப்பன் ஸ்டேட்மென்ட்
வழக்கமாக இதெல்லாம் லீக்ஸ் தகவல்களாகத்தான் வரும்.. ஆனால் இம்முறை மிகவும் வித்தியாசமாக மார்க் ஜுக்கர்பெர்க்கே
ஹைலைட்ஸ்:
- வாட்ஸ்அப்பிற்கு வரும் 3 புதிய அம்சங்கள்
- அவைகள் கிட்டத்தட்ட மொத்த வாட்ஸ்அப் அனுபவத்தையும் மாற்றும்
- இது லீக்ஸ் தகவல் அல்ல, மார்க் ஜுக்கர்பெர்க்கே சொன்ன தகவல்
- பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில், நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்பில் கூடிய விரைவில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
சுவாரஸ்யமாக, இது லீக்ஸ் தகவலோ அல்லது ஒரு வதந்தியோ அல்ல, மாறாக, இந்த அம்சங்கள் விரைவில் வெளிவரும் என்பதை மார்க் ஜுக்கர்பெர்க் தானே உறுதிப்படுத்தி உள்ளார்.
வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து அப்டேட்ஸ் மற்றும் தகவல்களைக் கண்காணிப்பதற்கு பெயர் போன வலைத்தளமான WaBetaInfo, வாட்ஸ்அப்பில் வரும் வரவிருக்கும் சில அம்சங்களைப் பற்றி விவாதிக்க வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி ஆன வில் கேத்கார்ட் மற்றும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மார்க் ஜுக்கர்பெர்க்கை அணுகி உள்ளனர்.
அவைகள் – Disappearing mode, View once மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் Multi device ஆதரவு ஆகியவைகள் ஆகும்.
வாட்ஸ்அப் ஏற்கனவே கடந்த ஆண்டு Disappearing மெசேஜஸ் அம்சத்தினை அறிமுகம் செய்திருந்தது. இந்த அம்சம் ஏழு நாட்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து மெசேஜ்கள் தானாக மறைந்துவிடுவதை உறுத செய்தது.
அந்த அம்சத்தின் அடுத்த கட்டமாக, உங்கள் எல்லா சாட்களிலும் disappearing messages-ஐ இயக்கும் disappearing mode-ஐ உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இது உங்கள் முழு வாட்ஸ்அப் அனுபவத்தையுமே முற்றிலுமாக மாற்றும். எனவே நீங்கள் உங்கள் எல்லா சாட்களிலும் disappearing messages-களை கொண்டிருக்க விரும்பினால், நீங்கள் disappearing mode-ஐ இயக்கலாம்.
அடுத்ததக வாட்ஸ்அப் “வியூ ஒன்ஸ்” என்கிற அம்சத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது, இது ஒரு நபர் உங்கள் மெசேஜை ஒருமுறை பார்த்தபின் அது தானாகவே மறைந்து போகும்.
இந்த அம்சம் இயக்கப்படும் போது, பெறுநர் உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் சாட்டில் இருந்து மறைவதற்கு முன்பு ஒரு முறை திறக்க முடியும். ஆனாலும் குறிப்பிட்ட கன்டென்ட் மறைவதற்கு முன் பயனர்களால் அதை ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுக்க முடியும் என்றும் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டார்.
வாட்ஸ்அப்பிற்கு வரும் மற்றொரு பெரிய அப்டேட் – மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வெறும், மல்டி டிவைஸ் ஆடஹரவு ஆகும். இந்த அம்சம் சில காலமாக சோதனைக்கு உட்பட்டுள்ளது, மேலும் இது இரண்டு மாதங்களுக்குள் பப்ளிக் பீட்டாவில் வெளிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் போன் பேட்டரி தீர்ந்தாலும் கூட, உங்கள் எல்லா மெசேஜ்களையும் கன்டென்ட்யையும் பல சாதனங்களில் சரியாக ஒத்திசைப்பது ஒரு பெரிய தொழில்நுட்ப சவாலாக இருந்தது, ஆனால் நாங்கள் இதை செய்துவிட்டோம், விரைவில் அதை நீங்கள் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்!” என்று ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மல்டி டிவைஸ் ஆதரவைப் பயன்படுத்தி நான்கு சாதனங்களை இணைக்க முடியும் என்றும் கேத்கார்ட் உறுதிப்படுத்தினார்.
வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் மூலம் வாட்ஸ்அப்பிற்கான ஐபாட் ஆதரவும் சேர்க்கப்படும் என்பதையும், விரைவில் வாட்ஸ்அப் பீட்டா வழியாக iOS பயனர்களுக்கு இது அணுக கிடைக்கும் என்பதையும் கேத்கார்ட் உறுதிப்படுத்தினார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.