fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

Telegram App-ல இதை OFF பண்ணி வைக்கிறது தான் நல்லது; ஏனென்றால்?

ஏனென்றால், வாட்ஸ்அப் அளவிற்கு நமக்கு பழக்கம் இல்லாத டெலிகிராம் ஆப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

ஹைலைட்ஸ்:

  • டெலிகிராம் ஆப்பில் கண்ணுக்கு தெரியாமல் நிறைய அம்சங்கள் உள்ளன
  • குறிப்பாக ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி பிரிவின் கீழ்!
  • அதிலொன்று தான் போன் நம்பரை ஹைட் செய்து வைப்பது.டெலிகிராம் ஆப் ஏற்கனவே எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் வழியாக அதன் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறுகிறது. இது தவிர்த்து, இந்த மெசேஜிங் பிளாட்பாரம் பாதுகாப்பு சார்ந்த பல வகையான கூடுதல் அம்சங்கள் மற்றும் விருப்பங்களை “மறைமுகமாக” வழங்குகிறது.

இது பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அனுமதிக்கிறது – அவற்றில் தனிப்பட்ட தகவல்களை மறைப்பதும் ஒன்றாகும்!

அதாவது பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை மறைக்க வேண்டும் என்று நினைத்தால், அதை செய்யலாம். இதனால் அந்நியர்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை டெலிகிராமில் அணுக முடியாது

“இதை செய்வது எப்படி” என்று யோசிக்கிறீர்களா? இதோ எங்கள் படிப்படியான எளிமையான வழிகாட்டியைப் பின்தொடரவும்.

முன்நிபந்தனைகள்:

– டெலிகிராமின் சமீபத்திய பதிப்பை நிறுவி இருக்க வேண்டும்
– பதிவு செய்யப்பட்ட தொலைபேசி நம்பர் உங்களிடம் இருக்க வேண்டும்
– நன்றாக வேலை செய்யும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

சரி வாருங்கள் உங்கள் மொபைல் நம்பரை டெலிகிராம் ஆப்பில் மறைப்பது எப்படி என்கிற வழிமுறைகளை பார்ப்போம்:

1. Telegram Settings-க்கு செல்லவும்!

உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிகிராம் ஆப்பைத் திறந்து, மேல் இடது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோட்டை கிளிக் செய்யவும், பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

2. Privacy and Security-ஐ திறக்கவும்!

செட்டிங்ஸ் விருப்பத்தில், ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி விருப்பத்தை நீங்கள் காணலாம். இந்த விருப்பத்தின் கீழ் தனிப்பட்ட தகவல்களை மறைக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விருப்பங்களை நீங்கள் காணலாம்.

3. இப்போது, Privacy என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்!

இங்கே லாஸ்ட் ஸீன், பெயர், தொலைபேசி எண் மற்றும் பலவற்றை மறைக்கும் விருப்பங்களை காண்பீர்கள்.

4. அதில் போன் நம்பர் விருப்பத்தை கிளிக் செய்யவும், பின்னர் Nobody அல்லது My Contacts விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் உட்பட உங்கள் தொலைபேசி எண்ணை யாருமே பார்க்க கூடாது என்றால் Nobody என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும். உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களுடன் உங்கள் தொலைபேசி எண்ணை நீங்கள் மறைக்க விரும்பவில்லை, மற்றவர்களுடன் தான் மறைக்க விரும்புகிறீர்கள் என்றால், My Contacts விருப்பத்துடன் செல்லலாம்.

அவ்வளவு தான்! உங்கள் மொபைல் நம்பர் இப்போது டெலிகிராமில் மறைக்கப்பட்டு இருக்கும். இதேபோல நீங்கள் ப்ரைவஸி செட்டிங்ஸ்-இன் கீழ் பெயர், லாஸ்ட் ஸீன் போன்ற பிற விவரங்களையும் கட்டுப்படுத்தலாம்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button