யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீட்டிலேயே உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தாவடி பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டியொருவர் நேற்று தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
குறித்த மூதாட்டி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் மாதிரிகளை சோதனையிட்டதில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.